அநியாயங்கள் அனைத்தையும் பர்தா போட்டு மூடிக்கொண்டு இங்கே வந்து இறங்குகின்றனர் பெண்கள் -முதலமைச்சர்

எம்.எச்.எம்.அன்வர்-
60000 சனத்தொகையைக்கொண்ட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஆதார வைத்தியசாலைக்குரிய ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற அனைத்தும் எதிர்காலத்தில் நிறைவேற்றித்தருவேன் இவ்வாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் நேற்று 24.12.2015 ஆதார வைத்தியசாலை தொடர்பாக வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் இம்மாகாணத்தில் 15000 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் இதற்கு நாம் அனைவரும் பொறுப்பாளிகள். இதனால் பலரின் வாழ்க்கை நடுத்தெரிவில் தத்தளிக்கிறது விவாகரத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன வெளிநாடு செல்வதால் சீரழிவுகளே அதிகம் காணப்படுகின்றன தாய் தந்தைக்குள் பிரச்சினை பிள்ளை பெற்றோருக்கிடையில் பிரச்சினை அனைத்து துன்புறுத்தல்கள் அவமானங்கள் அநியாயங்கள் அனைத்தையும் தாண்டி பர்தாவை போட்டு மூடிக்கொண்டு இங்கே வந்து இறங்குகின்றனர் எம் பெண்மணிகள் இவற்றினை தடுத்து நிறுத்துவது அனைவரது கட்டாய கடமையாகும்.

நான் முதலமைச்சராக இருக்கும்போது பாரபட்சம் கிடையாது தமிழ் முஸ்லிம் சிங்கள அனைத்து தரப்பினருக்கும் சமமான வகையிலேயே அபிவிருத்தி இடம்பெறும் கிழக்கு மாகாணத்தில் நிறைய வளம் உள்ளது நாங்கள்தான் பயன்படுத்த தவறியுள்ளோம்.

 4000 பட்டதாரிகள் கிழக்கில் வேலையில்லாதுள்ளனர் பல தொழிற்பேட்டைகள் அரசாங்கத்தடன் சரி வேறு மார்க்கமாகிலும் சரி ஆரம்பிக்கவுள்ளளேன் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -