கடினபந்து பயிற்சி கூடம், கரப்பந்தாட்ட மைதான நிர்மாணப் பணிகள் மும்முரம்..!

செயிட் ஆஷிப்-
ளைஞர் சேவைகள் மன்றத்தின் “சிரம சக்தி” திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் கடின பந்து கிரிக்கட் பயிற்சி கூடம் என்பவற்றை அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத்தினால் அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது அவரது நேரடிக் கண்காணிப்பில் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவற்றை விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக கூடிய விரைவில் கையளிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -