எம்.வை.அமீர் -
கல்முனை பிராந்தியம் உட்பட இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டியாகவும் இனநல்லுறவுக்கு இணைப்புப்பாதையாகவும் திகழ்ந்த மர்ஹும் மசூர் மௌலானாவின் இழப்பு கவலையளிப்பதாக சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச்செயலாளரும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் செனட்டர் (முன்னாள் கல்முனை மேயர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்) மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”
அன்னார் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் இனங்களில் ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் மாநகரசபை முதல்வராக இருந்த சந்தர்ப்பங்களிலும் ஏனைய காலகட்டங்களிலும் அவர் ஒற்றுமைக்காகவும் பிராந்திய அபிவிருத்திக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதியான மசூர் மௌலானா, பல்வேறு தேசிய அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்பட்ட போதிலும் இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து முஸ்லிம்கள் அவர்களது அபிலாசைகளை அடைந்து கொள்ள இறுதிவரை செயற்பட்டார் என்றும், அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிராத்திப்பதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
