ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் இரகசியப் பொலிசாருக்கு எதிராக தனியார் தொலைக்காட்சியொன்று வழக்குத் தொடுத்துள்ளது.
டீஆர்என் எனும் தனியார் தொலைக்காட்சிச் சேவையானது கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சியாகும். அதற்கான அனுமதிப்பத்திரமும் இந்தத் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளும், புலனாய்வுத்துறை பொலிசாரும் அடிக்கடி சோதனை என்ற பெயரில் தமது அலுவலகத்துக்கு வந்து கருவிகளை சேதப்படுத்துவதாக இந்த தொலைக்காட்சி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அத்துடன் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு, குற்றப்புலனாய்வு பொலிசார் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
