வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்பட்ட வங்கி ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்துள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளில் அடகு முறைமையை நீக்கியமை, நீண்ட கால குத்தகை சேவையை அகற்றியமை உட்பட பல விடயங்களை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியாக காலை 7 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் 8 அரச வங்கிகள் மற்றும் 12 தனியார் வங்கிகளின் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் சில வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

