மத்தியமுகாம் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதனை..!

முஹம்மட் நஸீர்-
புத்தாண்டை முன்னிட்டு மூவின மக்களும் வாழும் மத்தியமுகாம் நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன இன்று சுகாதார அதிகாரிகளினால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மத்தியமுகாம் நகரிலுள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், லங்கா சதோச, சில்லறைக் கடைகள், பெட்டிக் கடைகள் போன்றன சோதனையிடப்பட்டு மக்களுக்கு பொருத்தமற்ற உணவுகள் மற்றும் காலாவதியடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவ்வாறான வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு பரிசோதகர்களான எஸ்.தஸ்தகீர், என்.தேவனேந்திரன், நாவிதன்வெளி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.இளங்குமரன், பொது சுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.றம்சீன், ஏ.எச்.எம்.ஜாபீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -