எம்.ஜே.எம்.சஜீத்-
கல்வி க.பொ.த (சா.த) தர பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு கௌரவ இராஜங்க கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி
2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) தர பரீட்சை 08.12.2015 தொடங்கி 17.12.2015 முடிவடைகிறது. இம்முறை 4670 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதுடன் 664537 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இம்முறை கல்வி க.பொ.த (சா.த) தர பரீட்சைக்கு தோற்றும் இலங்கையின் சகல பிள்ளைகளுக்கும் கௌரவ கல்வி இராஜங்க அமைச்சர் வீ.எஸ்.இராதகிஷ்னன் அவர்கள் இதயம் கணிந்த வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் பரீட்சைக்கு தைரியத்துடன் தோற்றுவதற்கான சக்தியையும வல்லமையையும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.
