இவ் ஆண்டின் சிறந்த பிரதேச செயலகம் தெரிவு...!

எப்.முபாரக்-
லங்கையின் தேசிய உற்பத்தி அபிவிருத்தி அமைச்சினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பிரதேச செயலகத் தெரிவில், 2014- 2015ஆம் ஆண்டின் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 313.37 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசமாக குச்சவெளி பிரதேசம் காணப்படுகின்றது. கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றதனால் இங்கு வாழும் மக்கள், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த 2012 - 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே போட்டியில் இலங்கையின் இரண்டாவது சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

7R எனும் முறைமையை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறந்த பிரதேச செயலகங்கள் தரப்படுத்தப்படுகின்றன.

அதாவது, தயாரிப்பு (Right Product), தரம் (Right Quantity), நேரம் (Right time), இடம் (Right Place), செலவு (Right Cost), நிபந்தனைகள் (Right Condition), தகவல் அறியும் உரிமை (Right Information) என்பவற்றின் சிறப்பை வைத்தே இவை கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -