முஸ்லிம்களால் இன்று மீலாதுல் நபி தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இறைத்தூதர் முகமது நபி அவர்கள் பிறந்த தினதை ஒட்டி இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இதற்காக நாடெங்கிலும் கலைக்கலாசர நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையில், இறைத்தூதர் முகமது நபி அவர்களின் போதனைகளின்படி, இந்த தினம் சமாதானமும், ஒற்றுமையும் ஏற்படுத்தப்படும் தினமாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீலாதுல் நபி தினமானது, சமுகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உணர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீலாதுல் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினம் அனைத்து முஸ்லிம்களுக்கு முக்கியமான தினமாகும்.
இஸ்லாம், ஒற்றுமையையும், அமைதியையும் வலியுறுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
