சவுதி அரேபிய தீ விபத்தில் 25 பேர் பலி , நூற்றுக்கணக்கானோர் காயம் (காணொளி)

வுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவுதி அரேபிய இராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்தானது, மருத்துவமனையின் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தளத்தில், அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த தீ விபத்து குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -