எம்.ஐ.எம்.றியாஸ்-
அக்கரைப்பற்று தொடர்பில் மு.கா.தலைவர் றஊப் ஹக்கீம் அதிரடி முடிவு என்ற செய்திக்கு வெளிவந்த மறுப்பு செய்திக்கு பதிலடியாக அக்கரைப்பற்று மு.கா.மத்தியகுழு ஏற்பாட்டாளர் யூ.எல்.ஆரிபீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில்,
அண்மையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட குழுவினரின் கருத்துக்கள் சகலவற்றையும் செவிமடுத்த பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் இறுதியில் கருத்து கூறும் போது தற்போதுள்ள அரசியல் அதிகாரம் ஏ.எல்.தவம் என்பதால் அவரை இயங்கவிட்டு இணங்கிப்போக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டபின் அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவை மீளமைக்க ஒரு கென்வீனராக (ஏற்பாட்டாளராக) இருக்குமாறு என்னை மு.கா.தலைவர் கேட்டுக்கொண்டர்.
இதில் 50 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்கும் படியும் அதன் முதலாவது கூட்டத்தில் தலைவர் ஆகிய நான் கலந்து கொள்வதாகவும் இந்த டிசம்பர் மாதம் முடிவுக்கள் இது நடைபெற வேண்டும் எனவும் மு.கா. தலைவர் கூறினார்.
என ஏற்பாட்டாளர் யூ.எம்.ஆரீபீன் மேலும் இதுவிடயமாக தெரிவித்தார்.
இது தொடர்பான முந்திய செய்தியினை பார்க்க இங்கே click செய்யவும்.
இது தொடர்பான முந்திய செய்தியினை பார்க்க இங்கே click செய்யவும்.
இது தொடர்பான முந்திய செய்தியினை பார்க்க இங்கே click செய்யவும்.
இது தொடர்பான முந்திய செய்தியினை பார்க்க இங்கே click செய்யவும்.

