முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த சிலருக்கு, மரண தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கப்படலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமைக் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதுடன், அவர்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறு வழக்கு தொடரப்படும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய 6 மாத காலத்திற்குள் தீர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதன்போது, பிரபல விளையாட்டு வீரரின் கொலை, கப்பம் பெற்றமை, ஆட்களை கடத்திச் சென்றமை ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த நடைமுறைகள் அரசியல் அழுத்தம் இல்லாமல் சட்டரீதியாக மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சற்று மெதுவாகவே தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறினார்.
