சவுதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் - (வீடியோ)

வுதி அரேபியாவில் இலங்கை பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

இதன்போது சவுதி அரேபிய உயர்ஸ்தானிகருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. சவுதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவை அங்கிருந்த பொறுப்பதிகாரி ஒருவர் பொறுப்பேற்றார்.

அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய சங்க சம்மேள உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -