சரத்குமாரை வளர்ப்புத் தந்தையாக கருதவில்லை - ராதிகாவின் மகள் ரயான்

ரத்குமாரை நான் வளர்ப்புத் தந்தையாகக் கருதவில்லை என்று நடிகை ராதிகாவின் மகள் ரயான் தெரிவித்து இருக்கிறார். ராதிகாவின் மகள் ரயானுக்கும், சுழற்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுனுக்கும் அடுத்த வருட செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "சரத்குமாரை நான் வளர்ப்புத்தந்தையாக கருதவில்லை. அவரை ஒரு தந்தையை விடவும் அதிகமாக நான் கருதுகிறேன். 

என்னுடைய நிச்சயதார்த்தத்தின்போது அவரை என்னுடைய வளர்ப்புத் தந்தை என்றே எல்லோரும் எழுதினார்கள். அது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எல்லா விஷயங்களிலும் அவர் எனக்குத் துணை நிற்கிறார். 

எனக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்னிடம் பாசம் காட்டும் அவரை ஒரு தந்தையை விட மேலானவராகவே நான் பார்க்கிறேன்". என்று ராதிகா - சரத்குமார் தம்பதிகளின் மகளான ரயான் தெரிவித்து இருக்கிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -