நிந்தவூரில் நாளை மாலை (25-12-2015) நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20தாவது ஆண்டு நிறைவு மாநாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜலீல் ஜீ கௌரவிக்கப்படவுள்ளார்.
இவர் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நவமணி - தினக்கதிர் - வெளிச்சம் ஆகிய பத்திரிகைகளினூடாக செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் எழுத்துப்பணியை ஆரம்பித்தார்.
பின்னர் இடி - தேடல் வெளிச்சம் - தினபதி - தினமணி - யாழ் உதயன் - யாழ் வ்ழம்புரி - ஈழ நாதம் - விடிவெள்ளி - தினகரன் - வீரகேசரி -ஆகிய பத்திரிகைகளிலும் பிராந்திய செதியாளராகவும் எழுதத் தொடங்கி சுடர்ஒளி- பத்திரிகைகளின் உதவி ஆசிரியராஹவும் அசரா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் பணீயாற்ரியவர்.
மேலும் சிகரம் வானொலியின் பணிப்பாளராகவும், இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவ பணிப்பாளராகவும் இன்றுவரை கடமையாற்றுகின்றார்.
இவர் சென்ஜோன் முதலுதவி அமைப்பின் மெடலியன் தேசிய விருதினை -அதி மேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தவினாலும், சாரனிய இயக்கத்தில் அதிஉயர் ஜனாதி விருதை - அதி மேதகு ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினாலும் , சர்வோதய இயக்கதில் சுவர்ணபத்ம சம்மான விருதினை - அதி மேதகு ஜனாதிபதி டி.பி . விஜயதுங்கவினாலும், இளைஞர் சேவைகள் மன்றத்தில் சிறந்த இளைஞ்சனுக்கான தேசிய விருதினை - அதி மேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமரத்துங்கவினாலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபிதராகவும், பிரதம செயற்பாட்டாளராகவும், தலைவராகவும் இலக்கிய பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
