அ.இ.ம.காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸில் இணைவு..!

அபு அலா –
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இன்று காலை (28) அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எம்.சமீம் உள்ளிட்ட குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இணைந்துகொண்டார்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீவிர போராளியாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் இறக்காமம் பிரதேசத்துக்கான செயற்பாட்டு அதிகாரியாகவும் செயற்பட்டு வந்த இவர், சில சொற்ப இலாபங்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -