மன்னாரில் பிரமான அடிப்படையிலான உதவித்திட்டங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு..!

டக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய கௌரவ.அய்யூப் அஸ்மின் அவர்களின் பிரமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பின்வரும் உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, காயா நகர்; முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுனைஸ் நகர், பிச்சைவாணிபக் குளம் ஆகிய கிராமங்களின் தெரிவு செய்யப்பட்ட 175 விவசாயிகளுக்கு மண்வெட்டி, மற்றும் தண்ணீர் வாளிகளும், 4 விவசாய அமைப்புகளுக்கு இயந்திர தெளி கருவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

முசலி கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 110 கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இரண்டு பாடசாலைகளுக்கு அலுவலகத் தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டன

சுயதொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட மாதர் அபிவிருத்தி சங்கத்திற்கு சமையற் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு 20 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வாறான உதவித்திட்டங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 28-12-2015 அன்று பெரியமடு முஸ்லிம் மகா வித்தியாலயம், வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், பிச்சைவாணிபாக் குளம் மற்றும் ஹுனைஸ் நகர் மஸ்ஜிதிலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியலை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும், தேர்தல் காலங்களில் மக்களை நாடி வருகின்ற பல அரசியல் தலைவர்கள் தேர்தலுக்குப் பின்னர் மக்களை நாடி வருவதில்லை, ஆனால் நாம் மக்களை நாடி வருகின்றோம், உங்களது பிரச்சினைகளை உங்களோடு கலந்து பேசுகின்றோம் அதற்கான தீர்வுகளையும் உங்களோடு கலந்தாலோசிக்கின்றோம், அவற்றில் எம்மால் முடியுமானவற்றை முழுமையாக நிறைவேற்றித் தருகின்றோம். நல்லாட்சி என்பது எல்லோராலும் பின்பற்றப்படும்போது மாத்திரம்தான் அதனது முழுமையான பயனை மக்கள் அனுபவிக்க முடியும், அரசியல் வாதிகள் மாத்திரம் நல்லாட்சியைப் பின்பற்றி ஏனையவர்கள் அதனை பின்பற்றாமல் இருந்தால் சிறப்பானதல்ல. இதற்கு இரண்டு உதாரணங்களை இங்கு குறிப்பிடுவது நல்லது என நினைக்கின்றேன்.

பெரியமடு கிராமத்திலே நடந்த ஒரு விடயத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் அங்கு மூன்று முக்கிய பிரதேசங்கள் இருக்கின்றன, அவற்றிலே முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றார்கள், மூன்று பிரதேசங்களின் விவசாய அமைப்புகளுக்கும் இவ்வாறான உதவித்திட்டம் குறித்து நாம் அறிவித்தோம், அவர்களிடமிருந்து தேவையுள்ள விவசாயிகளின் படியலைக் கேட்டிருந்தோம், அவர்கள் 224 நபர்களை உள்ளடக்கிய பெயர் பட்டியலை எம்மிடம் வழங்கினார்கள். நாம் அவர்களிடத்திலே குறிப்பிட்டோம் எம்மிடம் 175 பேருக்கான உபகரணங்களே இருக்கின்றன எனவே உங்களது பெயர்ப் பட்டியலில் தேவையுடவர்களை முன்னுரிமைப்படுத்தி தயாரித்துத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டோம், ஆனால் அதற்கு அந்த விவசாய அமைப்புகள் உடன்படவில்லை அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்கள், எங்களுடைய சங்கத்திலே இருக்கின்ற அனைவருக்கும் உதவிகளை வழங்க வேண்டும், ஒருவரை எடுத்து இன்னுமொருவரை நீக்கினால் பிரச்சினை வரும் என்று தெரிவித்தார்கள். 

நாம் ஆச்சரியமடைந்தோம், தேவையுள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்திட்டங்களை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றுவது எப்படி நியாயமாகும். இங்குதான் நல்லாட்சியை மக்கள் மீறுகின்ற செயற்பாட்டினைக் காணுகின்றோம். தேவையுள்ளவர்களுக்கு அபிவிருத்தி என்ற விதியை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்

இன்னுமொரு சம்பவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். 110 மாணவர்களுக்கு தலா 2500.00 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கும்படியாக எமது நிதியினை நாம் ஒழுங்கமைத்திருந்தோம். 

ஆனால் இங்கே எமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொதிகளைப் பார்க்கின்ற போது அவை 1750.00 ரூபா பெறுமதியைத் தாண்டாத பொதிகளாகவே இருக்கின்றன, இங்கு அதிகாரிகள் தவறிழைத்திருக்கின்றார்கள் என்பது எனக்குப் புலப்படுகின்றது, அரசியல்வாதிகளால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியை அதிகாரிகள் சீராக உபயோகிப்பார்களாக இருந்தால் மக்களுக்கு தரமான சேவைகள் சென்றடையும், வவுனியாவிலும் இத்தகைய செயற்திட்டத்தை நாம் அமுல் நடாத்தியிருந்தோம் அங்கே மிகவும் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. 

ஆனால் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் இதுவிடயத்தில் தவறிழைத்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இதுவிடயத்தில் இன்ஷா அல்லாஹ் மேற்கொண்டு நடவடிக்கைகளை நான் எடுப்பேன். 

எனவே நல்லாட்சி என்பது ஒரு சாராருக்கு மாத்திரம் உரித்தானதல்ல அது எல்லோருக்கும் பொதுவானது என்பதை நாம் புரிந்துகொள்வது சிறப்பானது என்று கருதுகின்றேன். இத்தகைய உதவித்திட்டங்கள் எதிர்காலத்திலும் மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன. அவற்றை உரிய அமைப்பில் நிறைவேற்றுவதற்கு தங்களின் ஒத்துழைப்புகள் எமக்கு மிக மிக அவசியமாகும் என்றும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன், என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாண செயற்குழு உறுப்பினர்களான ஜனாப்.அ.ஆரிப், ஜனாப்.ஹாஜா மஹ்தூம், ஜனாப் ஹனீபா, ஜானாப் ஏ. றிஸான், ஜனாப் மஹ்பூப், ஜனாப். தஸ்லீம், ஜனாப்.அஸ்மி ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்- ஏ.ஜே.ஜவாஸ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -