பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் - பொதுபல சேனா அரசிடம் கோரிக்கை

லங்கையில் இஸ்லாமிய மயமாக்கல் நல்லிணக்கம் என்ற திரையின் ஊடாக மறைக்கப்பட்டுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புபட்டுள்ள இந்த இஸ்லாமிய மயமாக்கலை நல்லிணக்க திரையிலிருந்து நீக்கி, அதனை ஒரு அடிப்படை வாதமாகவும், பயங்கரவாதமாகவும் அரசு இனங்காண வேண்டுமென பொது பல சேனா அமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புகளை பேணி வருகின்றார்களா என்று அரசு ஆராய வேண்டும். 

அதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -