சம்மாந்துறையில் இருந்து வரக்காபொல சென்ற வாகனம் விபத்து - 5வர் பலி (Photos)

எமது நிருபர்
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் .

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களிள் மூவர் பெண்கள் என்பதுடன் வேனின் சாரதி, குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .

சம்மாந்துரையில் இருந்து பயணித்த வேனும் பொல்கஸ்கோவிட்ட பகுதியில் இருந்து சோமாவதி யாத்திரைக்காக பயணித்த தனியார் பஸ்ஸூமே இவ்வாறு மோதுண்டுள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -