நாவிதன்வெளி வைத்தியசாலையில் 20 இலட்சம் நிதியில் அவர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு..!

அபுஅலா -
சுகாதார அமைச்சரின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 20 இலட்சம் ரூபா நிதியில் நாவிதன்வெளி, அன்னமலை கிராமத்திலுள்ள ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட அவர சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) காலை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சித்தி ஜாயிஸா தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் விஷேட அதிதிகளாக சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், இணைப்பாளர் ஏ.எல்.அமானுள்ளா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின்போது 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்களையும் சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கு பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -