பாராளுமன்ற உறுப்பினருக்கான 1 நாள் கொடுப்பனவு 19,500 ரூபாவினால் அதிகரிப்பு..!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நாள் வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் தொகையை 500 ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது 19500.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 160000.00 (ஒரு லட்சத்து 60 ஆயிரம்) ரூபா கிடைக்கப் பெறுகின்றது. ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -