அல்லாஹுதஆலா குர்ஆனில் ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து கொடிய காபிரான பிர்அவ்னிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுங்கள் என்று கூறி அனுப்பும் சம்பவத்தை இவ்வாறு சொல்லிக்காட்டுகிறான்.
اذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ﴿٤٣﴾ فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ ﴿٤٤﴾
'நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். 'நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான வார்த்தைகளால் சொல்லுங்கள்இஅதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.' (சூரா தாஹா, அத்தியாயம் - 43,44)
இங்கு அல்லாஹ் கொடிய கெட்ட காபிர் ஒருவருக்கு மார்க்கத்தை எத்திவைக்கும் போது கூட எவ்வாறு பணிவாக, ஒழுக்கமாக,மிருதுவாக கதைக்க வேண்டும் என்ற விடயத்தினை எமக்கு கற்றுத்தருகின்றான். ஆனால் தங்களது மார்க்க பேச்சுக்களை பார்க்கும் போது மேற் சொன்ன குர்ஆன் வசனங்களுக்கு நேர் மாற்றமாக அல்லவா இருக்கின்றது.
அது ஏன்? தாங்கள் கத்துகின்றீர்களே, நாம் குர்ஆன் சுன்னாவைத்தான் கடைப்பிடிப்போம் அது அல்லாதவைகளை தகர்த்து எறிந்து விடுவோம் என்பதாக!!! அவ்வாறாயின் இங்கு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள குர்ஆன் வசனம் தங்களது கணிப்பின் படி குர்ஆன் சுன்னாவுக்கு அப்பாற்பட்டதா? அல்லது இது குர்ஆனில் சொல்லப்படாத வார்த்தைகளா?
قطب الأقطاب என்ற வார்த்தைக்கு புத்தகக் களஞ்சியம், வாசிக சாலை என தாங்கள் அர்த்தம் சொல்லும் போதே விளங்குகின்றது உங்களுக்குள்ள அரபு மொழியின் வள்ளல எவ்வாறென்று.
அரபு மொழி தெரியாததனால்தானே உங்கள் அண்ணனும் எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்து தருகின்றார்கள். எனவே நேரடியாக அரபுப் புத்தகங்களை படித்து விளங்க முடியாமல் அவர்களின் தமிழாக்கங்களையே படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அண்ணன் என்ன சொன்னாலும் அது சரியோ பிழையோ அதை அப்படியே பின்பற்றுகின்றீர்கள்.
இவ்வாறு தானே தாங்களும் சுகதாச உள்ளரங்கில் பேசிய பேச்சில் தெளிவாகக் கூறினீர்கள்.
எனவே அவர்களின் தர்ஜுமாவில் இந்த ஆயத்தை இருட்டடிப்பு செய்துவிட்டாரா? அல்லது உங்கள் பார்வையில் இது படவில்லையா? அல்லது இதுவெல்லாம் இஸ்லாத்தில் சொல்லப்படாத விடயங்களா? அல்லது இது பலவீனமான வார்த்தைகளா? என்ன சொல்லுகிறீர்கள்.
ஏனெனில் தங்களது பேச்சைப் பார்க்கும் போது ஒரு படிப்பறிவில்லாத நாகரீகமற்ற ஒரு காடயனைப் போல் அல்லவா இருக்கின்றது.
இவ்வாறு பேசுவது செயலாளர் என்ற பதவியில் உள்ளவர்களுக்குக் கூட பொருத்தமில்லையே! எனவே உங்களது பேச்சை குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பேச்சுகளாகவும், ஒழுக்கம் மரியாதையைப் பேணி பேசக்கூடிய பேச்சாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். முடியவில்லையாயின் தயவு செய்து பதவியையாவது திருப்பி கொடுத்துவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவான்!
ஏனெனில் ஹதீஸ்களில் வந்துள்ள நாவினால் ஏற்படும் விபரீதங்களைப்பற்றிய விளக்கத்தை பார்க்கும் போது விளங்குது தங்களிடமுள்ள அந்த நாவே தங்களை நரக படுகுழிக்கு இழுத்துச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்பதாகும்.
அடுத்த விடயம் என்னவெனில் இன்னொரு முஸ்லிமைப் பார்த்து அவன் முஷ்ரிக்,அவன் காபிர்,அவன் முர்தத் என்று வாய்கூசாமல் தீர்ப்பு கொடுக்குரீர்களே! இவ்வாறு தீர்ப்பு வழங்கும் உரிமையை அல்லாஹ் உங்கள் கையில் தந்து விட்டானா?அல்லது அல்லாஹ்விடம் இருந்து பறித்தெடுத்து விட்டீர்களே!என்ன அதிகாரம் உங்களுக்கு இருக்கின்றது இந்த வேலையைப் பார்க்க...
இறுதியாக! பின்வரும் குர்ஆன் வசனத்தையாவது உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக எடுத்துக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَـٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
மேலும் அவர்கள், 'எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!' என்று கூறுவார்கள்; இன்னும்,அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.