செய்தியாளர்- பி.எம்.எம்.ஏ.காதர்-
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நாளைக் காலை (13-11-2015)8.30 மணிக்கு வைத்தியசாலை வளாக முன்றலில் நடைபெறவுள்ளதாக சம்மாந்தறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.எம்.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
வைத்திய சாலையில் நீண்ட காலமாக சத்திர சிகிச்சை கூடத்தின் அடிப்படை வசதிகள்,சத்திர சிகிச்சை உபகரணங்கள் இல்லாமை,தாதியர் விடுதி புணர்நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த அடையாள வேலை நிறுத்தமும், கவனயீர்ப்புப் போராட்டமும் நடாத்த எற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் டொக்டர்கள்,தாதி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் உள்ளீட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
