வரலாற்றில் O/L பரீட்சைக்கு இவ்வாறு தோற்றிய பரீட்சார்த்திகள்...!

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இம்முறை ஆறு இலட்சத்து 64, 537 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 70,409 பேரே சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 87,128 பரீட்சார்த்திகள் அதிகளவில் தோற்றவுள்ளனர். 

இவர்களில் நான்கு இலட்சத்து 3,442 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் இரண்டு இலட்சத்து 60,895 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த வருடம் பாடசாலை மூலமாக மூன்று இலட்சத்து 70, 487 பேர் தோற்றியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை இம்முறை 4,670 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு கடந்த வருடம் 4,279 பரீட்சை மத்திய நிலையங்களே இயங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -