எம்.ஐ.எம்.றியாஸ்-
சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் தலைமையில் அக்கரைப்பற்று ரீ.எப்.சீ.ஹோட்டலில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாசீல் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் ஆகியோர் பிரதான வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரைகளை இங்கு ஆற்றினர்.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.முனாஸ்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளன செயலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் உட்பட பிரமுகர்கள் இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






