நிஸ்மி-
அனா்த்தா்ங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றபோது அனா்த்தங்களை எதிா் கொண்டு அதனால் ஏற்படும் அனா்த்தங்களை குறைப்பதற்கு தேவையான முன்னாயத்தங்களை செய்வதன் மூலம் அனா்த்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை கணிசமான அளவு குறைக்க முடியும் .என்றும் இதற்கு அரசாங்கம் மாத்திரமல்லாது சமூக மட்ட அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளா் ஏ.எம்.அப்துல் லெத்திப் தொிவித்தாா்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிாிவிற்கான பிரதேச அனா்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் (30) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் இடம் பெற்றபோது கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவா் மேற்கண்டவாறு தொிவித்தாா்.
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளா் ஏ.எல்.அஸ்மி, உதவி பிரதேச செயலாளா்,எம்.எஸ்.எம்.றஸ்ஸான், பிரதேச செயலாளா் வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் நீா்ப்பாசன திணைக்களம் ஆகியவைகளின் பொறியியலாளா்கள், மின்சார அத்தியட்சகா், அனா்த்த முகாமைத்துவ உத்தியோகத்தா், சமூக அவிருத்தி உத்தியோகத்தா்,தொழில்நுட்ப உத்தியோகத்தா்கள், கிராம உத்தியோகத்தா்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவா்கள் எள ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பருவ மழை பெய்வதனால் மழைகாலத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு அனா்த்தங்களை எதிா் கொண்டு அவ்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பல்வேறு உபாயங்கள் பற்றி கலந்துரையாடி தீா்மானங்கள் எடுக்கப்பட்டன.



