ந.குகதர்சன்-
மட்டக்களப்பு வாகனேரி இத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஆலய நிர்வாகிகள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 24ம் திகதியன்று இவ்வாலயத்தின் கல் உருவச்சிலை இனந்தெரியாத நபர்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச பொது மக்களின் முயற்சியினாலும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பின் மூலமும் இப்பிள்ளையார் ஆலயத்தினை புதிதாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



