முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் ‘இறை தூதரின் பணி’ விசேட சொற்பொழிவு..!

இக்பால் ஜெம்சத்-
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து ‘இறை தூதரின் பணி’ என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேய்க் ஹுசைர் இஸ்லாஹி BA அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.

மாதத்தின் முதல் வாரம் மற்றும் நான்காம் வாரம் என தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயான் நிகழ்ச்சி தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதலாம் வார நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வதோடு, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாடு குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -