என் மனைவி ஹவ்லத்
காலை எழந்து வந்து
கனிவுடனே எனை எழுப்பி
பாலைக் கரம் ஏந்தி
பனிவுடனே வந்து நிற்பாள்.
வேலை நான் செல்ல
வேண்டும் பணி செய்து
வாலை வந்தெனக்கு
வழிகாட்டி நின்றிடுவாள்.
மாலை வரும் பொழுது
மகிழ்வுடனே எனை அணைத்து
சோலை மணம் பரப்ப
சொந்தம் கொண்டாடிடுவாள்.
ஏழை என் மனதை
என்னாளும் மகிழ்வித்து
ஓலைக் குடிசையிலே
ஒற்றுமையாய் வாழுகிறாள்.
பி.எம்.எம்.ஏ.காதர்-
