அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபையினால் கொழும்பு பிரதேசத்தில் வாகானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை நவீன முறையில் காா்ட் சிஸ்டம் முறையில் வாகனங்களை தரித்தல் அதற்கான செலுத்தல்களை செலுத்தும் வெளிநாட்டு நவீன முறையொன்றை இன்று (12) அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் சம்பந்தமாக கொழும்பு மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் ஊடக மாநாடொன்றில் இத் திட்டம் சம்பந்தமாக விளக்கிக் கூறினாா்.
முதற்கட்டமாக கலாதாரி ஹோட்டலில் இருந்து வெள்ளவத்தை வரையிலான பாதைகள், மற்றும் டுப்பிளிக்கேசன் வீதி வறை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதற்காக சுவிஸ்நாட்டில் இருந்து 1.5 மில்லியன் ஈரோ செலவினால் திட்டத்தில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதற்காக ரீங்கா காா் பாக் தணியாா் நிறுவனமும் கொழும்பு மாநகர சபையும் எதிா்வரும் 8 வருடத்திற்காக ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.
தமது வாகானங்களை தரித்தமைக்கான நேரம் மற்றும் கார்ட் முலம் தமது வாகன இலக்கம், மற்றும் லைசனைச் இலக்கங்களைச் செலுத்தி குறி்ப்பிட்ட நேரத்திற்கு தரித்தமைக்கான காட் முலம் இலக்ரோணிக் மெசின் முலம் செலுத்தல் திட்டத்தினை ஆரம்பிக்கப்பட்டது. . 850 காா் தரிப்பிடத்தில் சுமாா் 5000 காா்கள் தரிக்கும் இடங்கள் இந்தக் கம்பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக் கம்பனியின் வருமாணத்தில் ஒரு மாதத்திற்கு 3.4 மில்லியன் ருபாவை மாநகர சபைக்குச் செலுத்தல் வேண்டும் அத்துடன் விளம்பரம் மற்றும் இதர இலாபத்திலும் 40 வீதத்தை மாநகர சபைக்கு செலுத்தல் வேண்டும். இதற்காக 140 மெசின்கள் வெளிநாட்டில் இருந்து இக் கம்பணியினால் தருவிகக்பட்டுள்ளன.



