மூன்றாவது முறையாகவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய இந்த மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகமொன்றை தனது பிரச்சார நடவடிக்கைக்குப் பயன்படுத்தி, அதற்கு நிதி வழங்காமை தொடர்பில் விசாரணை செய்வதற்கே மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆணைக்குழுவிற்கு சென்ற 7 மணித்தியாலயங்கள் காத்திற்க்கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
