வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்..!

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வடக்கு-கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கபடுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஹர்த்தாலை முன்னெடுக்கின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட வட, கிழக்கு மாவட்டங்களில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.


திருகோணமலை - ஏ.எம்.ஜீத்
13.11.2015 ஆகிய இன்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று திருகோணமலை வாழ் தமிழ் பேசும் மக்கள் ஹர்த்தாலை திருகோணமலையில் அனுஷ்டித்தனர்.

இதன் பொருட்டு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை பூட்டியும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலையை புறக்கணித்தும் அரச ஊழியர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளை புறக்கணித்தும் தமது பங்களிப்பினை செலுத்தினர்.



ஏறாவூர் நிருபர்-ஏ.எம்.றிகாஸ்
மிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு – சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி போன்ற பகுதிகளிலும் இன்று 13.11.2015 பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடைகள், உணவகங்கள் மூடப்பட்டிறுந்தன பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காததனால் பாடசாலைகளும் இயங்கவில்லை பொதுச்சந்தைகள் திறக்கப்படவில்லை வீதிகளில் சனநடமாட்டம் குறைவாக காணப்பட்டது இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் எவ்வித தடையுமின்றி நடைபெற்றன.  




யாழ்-  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -