உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல்...!

அவுஸ்ரேலிய தொழிலதிபர் பிரயன் சடிக் என்பவர்  இலங்கையில் முதலீடு செய்த ஒரு மில்லியனுக்கு அதிகமான அவுஸ்ரேலிய டொலர், பங்குகளை உதய கம்மன்பில சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த உதய கம்மன்பில இது போலியான குற்றச்சாட்டு எனவும் , போலியான ஆவணங்கள் மூலமாக இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான உண்மையான விடயங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -