க.கிஷாந்தன்-
தீபாவளி பண்டிகை 10.11.2015 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு 07.11.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து அட்டன் மற்றும் மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களுக்கு விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து மலையகம் செல்லும் பயணிகளின் நலன்கருதி இந்த பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.








