செய்தியாளர்- க.கிஷாந்தன்-
மறைந்த கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு 12.11.2015 அன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் 12.11.2015 அன்றைய தினம் மூடப்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் அந்தவகையில் மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் அட்டன் நகர பகுதியில் அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் கடை மட்டும் திறந்து வியாபாரம் செய்தார்கள்.
இது தொடர்பாக நாம் மேற்படி மீன் கடை முகாமையாளரிடம் கேட்டபோது…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன தலைமையகத்தில் தனக்கு திறந்து வியாபாரம் செய்யும்படி உத்திரவிட்டதன் காரணமாகவே தான் திறந்து வியாபாரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.



