எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
அம்பாறை பொத்துவில் பிரதேச நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமை புரியும் சீ.பீ.அலியார் (வயது38) என்பவர் தனக்கு வழங்கப்பட்ட இறத்தல் குளப் பராமரிப்புக்காக சென்று திரும்பு வழியில் நேற்று மாலை யானையின் பிடிக்கு உள்ளாகி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து குறித்த பகுதி விவசாயி ஒருவருடன் வீடு திரும்பும் வழியில் காட்டுக் ஒழிந்திருந்த யானை இழுத்துச் சென்று தாக்க முற்பட்டுள்ளது. இவ்வேளை குறித்த ஊழியர் சிறு தாக்குதலுடன் மயிரிழையில் உயிர் காப்பற்றப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
