முகநூல் ஊடாக ஊடகவியலாளரை அவதூறு செய்த அரசியல் பிரமுகர் - குற்றப்பிரிவு ஊடாக சட்ட நடவடிக்கை

க.கிஷாந்தன்-

முகநூல் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரை மோசமான வார்த்தைகளால் அவதூறு செய்தும் அச்சுறுத்தலும் செய்த முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக இணைய குற்றப்பிரிவு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர் மலையகத்தின் முன்னாள் நகர சபை தலைவராக கடமையாற்றியவர் என்பது முக்கிய விடயம்.

குறித்த ஊடகவியலாளர் இவரைப்பற்றிய செய்திகளை பத்திரிகையில் எழுதி வருவதாக குறித்த அரசியல் பிரமுகர் ஊடகவியலாளரின் முகநூல் உள்பெட்டியினுள் தகாத வார்த்தைகளால் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நாகரிகமான முறையில் ஊடகவியலாளர் பதில் கூறியும் மறுபடி குறித்த அரசியல் பிரமுகர் அச்சுறுத்தும் வகையில் பதில் பதிவேற்றியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களை சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை விசாரிக்கும் பிரிவினருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதால் அதன் மூலம் முறைப்பாடு செய்து குறித்த அரசியல் பிரமுகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர் தனது நிறுவன சட்டதரணிகளின் ஆலோசனையைப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் வழியாக பெறப்பட்ட ஆதாரங்கள் சைபர் கிரைம் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளன. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -