அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவேன் - அமைச்சர் நிமல்

மக்களுக்கு சேவை செய்வது அவசியம் என்பதால் அமைச்சு பதவி பெற்று கொண்டதாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்லது ரணில் விக்ரமசிங்கவிடம் செல்லவில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 

ஐக்கிய தேசிய கட்சிக்கு நான் செல்லவில்லை. ரணில் விக்ரமசிங்கவிடமும் நான் செல்ல வில்லை. ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய அரசாங்கத்தில் நான் அமைச்சு பதவி பெற்று கொண்டேன்.

அரசாங்கம் சரியான முறையில் சென்றால் நான் அரசாங்கத்துடன் செயற்படுவேன், அரசாங்கம் தவறான முறையில் சென்றால் அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவேன்.

ன்கரை வருடங்கள் நிறைவடையும் வரையில் நாடாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. 

பாதைகள், நீர், தொழில், அபிவிருத்திகளையே மக்கள் கோருகின்றார்கள். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இவற்றினை பெற்றுகொடுக்க முடியாது.

அரசாங்கத்தினுள் புதிய பல்வேறு கருத்துகள் உள்ளன. அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சியில் பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றது. இதுவே அரசாங்கத்தினுள் காணப்படுகின்ற ஜனநாயகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -