நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3வருடங்களாகியும் திறக்கப்படாத ஆய்வுகூடம்!

சௌத்துல் உம்மத்-
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 03 வருடங்களுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடம் இன்னும் திறந்து, மாணவர் பாவனைக்கு விடப்படாத மர்மமென்னவோ என மாணவர்களும், பெற்றோர்களும் அங்கலாய்க்கின்றனர்.

இது கடந்த 2012.10.05ந் திகதி கல்லூரி அதிபர் எஸ்.அஹமது தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.ரி.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இவ்வாய்வு கூடம் கடந்த 2013.09.20ந் திகதி பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டதாக அதிபர் தெரிவிக்கின்ற போதிலும், இன்னும் இது சம்பிரதாய பூர்வமாக ஏனைய இடங்களில் திறக்கப்பட்டு, மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது போன்று கையளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

இதனால் பாவிக்கப்படாமலே இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள துருப்பிடிக்காத சில்வர் குழாய்கள் துருப்பிடித்துக் காட்சியளிக்கிறது. பாவிக்காததால் துருப்பிடித்திருக்கிறதா சில்வர் குழாய்? இல்லை, பொருத்தப் பட்டிருப்பது வெறும் போலி சில்வரா? அப்படியானால் இன்னும் இதில் என்னென்ன போலியோ? யாரறிவார்? இது மகா ஜனங்களின் கேள்விகளாகும்.?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -