3வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெறுகின்றது-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இன்று 07 சனிக்கிழமை இடம்பெற்று வருகின்ற மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மேற்படி இளைஞர் பாராளுமன்றத தேர்தலில் வாக்களிக்க இளைஞர்இயுவதிகள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இத் தேர்தலில் கடமையில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதோடு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காத்தான்குடி இஸ்ஸத் இளைஞர் கழகம் சார்பாக முஹம்மத் பதூர்தீன் முஹம்மத் சம்ஹான் இ யூஸ் இளைஞர் கழகம் சார்பாக முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் சிஹாப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாகவும் இகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1252 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஸமீலுல் இலாஹி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மாவட்டத்தில் 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு தொகுதியில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஆரையம்பதி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இன்று இலங்கையில் இளைஞர் பாராளுமன்றதேர்தல் நடைபெற்றுவருகின்றது: இளைஞர்கள் ஆர்வத்துடன் அமைதியாக வாக்களிப்பு!

காரைதீவு  நிருபர் சகா

இளைஞர் பாராளுமன்றத்தேர்தல் நாடளாவியரீதியீல் இன்று   7ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிக்கு ஆரம்பமாகியது. இளைஞர்கள் ஆர்வத்துடன் அமைதியாக வாக்களித்துவருகின்றனர்.

இம்முறை தொகுதிவாரியாக இடம்பெறவுள்ள தேர்தலானது இன்று  7ம் திகதி இதற்கான தேர்தல் நாடுபூராகவும் நடைபெற்றது.225 பேரைக் கொண்ட இந்த இளைஞர் பாராளுமன்றத்தில் நாடுபூராவும் உள்ள 160 தொகுதிகளில் இருந்தும் 160 பேரும் ஏனையோர் போனஸ் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில்..

 கிழக்குமாகாணத்தில் 47569இளைஞர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்து 18920பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 18607பேரும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10042பேரும் வாக்களிக்கத்தகுதிபெற்றுள்ளனர்.
இத்தேர்தலில் கிழக்குமாகாணத்திலிருந்து 11இளைஞர்கள் பாராளுமன்றிற்கத் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக களத்தில் 109பேர் போட்டியிடுகின்றனர்.

காரைதீவில் ….

காரைதீவிலிருந்து   இளைஞர் பாராளுமன்றத்திற்காக காரைதீவு பிரதேச செயலக பிரிவு வேட்பாளராக  சுலேச்ஷன்  லோகராஜு -காரைதீவு.2 தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இவர் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் தேசிய இளைஞர் அணியின் உபதலைவராவுள்ளார். இப்பதவிக்கு இலங்கையின் நாலாதிசைகளிலுமிருந்தும் கலந்துகொண்ட மூவின இளைஞர்கள் மத்தியில் போட்டி நிலவியபோதிலும் இறுதியில் செல்வன் லோ.சுலக்சன் தெரிவாகி தேசியரீதியில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இன்று வாக்களிப்பு!

இளைஞர்பாராளுமன்றத் தேர்தலின் காரைதீவுப்பிரதேசத்திற்கான வாக்களிப்பு இன்று  சனிக்கிழமை காலை மிகவும் ஜருராக பிரதேசசெயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்; முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.
வேட்பாளர் லோ.சுலக்சன் வாக்களிப்பதையும் வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் கடமையிலீடுபடுவதையும் இளைஞர்கள் திரண்டுவந்த வாக்களிப்பதையும் காணலாம்.








சாய்ந்தமருதில்

(ஹாசிப் யாஸீன்)

கொள்கை திட்டமிடல் அமைச்சின் வழிகாட்டலில் இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் இன்று காலை 7.00 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக கல்முனைத் தொகுதி இளைஞர்; பாராளுமன்றத் தேர்தலுக்கான சாய்ந்தமருது பிரதேசத்திற்கான வாக்களிப்பு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில் இளைஞர்; சேவை அதிகாரி எம்.ஏ.ஏ.அஸ்வத் அலியின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று காலை 7.00 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இத்தேர்தலில் ஏ.எம்.எம்.தில்சான்,
எஸ்.எம்.சுஜான்,  எம்.சீ.எம்.முனா ஆகிய மூன்று வேட்பாளர்களும்
போட்டியிடுகின்றனர். 

இத்தேர்தலில் சாய்நதமருது பிரதேசத்தில் 20 இளைஞர்; கழகங்களிலிருந்து 731
பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் பெண்கள் 38 பேர் வாக்களிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கல்முனைத் தொகுதிற்கான தேர்தல் கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ் ஆகிய பிரதேச செயலகங்களிலும் இடம்பெறுகின்றன.  இம்முறை இளைஞர் பாராளுமன்றத்திற்கு கல்முனை தொகுதியிலிருந்து ஒருவர் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளமையில்  கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ் மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் இத்தேர்தல் பலத்த போட்டிக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இதில் 168 பேர் தேர்தல் மூலமும் 57 பேர் தகமை அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



எம்.எம்.ஜபீர்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடாத்தும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2015/2016 இன்று காலை 7 மணி தொடக்கம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இத்தேர்தல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அம்பாரை மாவட்டத்திலுள்ள பொத்துவில், சம்மாந்துறை, அம்பாரை, கல்முனை ஆகியதேர்தல் தொகுதிகளிலிருந்து 04 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 49 வேட்பாளர்கள் போட்டியிடும் இதேவேளை 511 இளைஞர் கழகங்களிலிருந்து 18920 அங்கத்தவர்கள் வாக்களிக்கதகுதிபெற்றுள்ளனர்.

இத்தேர்தல் இன்று அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும், இதற்கு மேலதிகமாக லகுகல பிரதேச செயலகத்திற்கான இணைப்பு வாக்களிப்பு நிலையமாக பாணம தமிழ் மகா வித்தியாலயம் உள்ளடங்கலாக 21 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறகின்றது.

இதற்கமைய பொத்துவில் தேர்தல் தொகுதியில் 7406 வாக்காளர்களும், அம்பாரை தேர்தல் தொகுதியில் 4735 வாக்காளர்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 4276 வாக்களர்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 2503 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.எம்.சிசிரகுமாரதெரிவித்தார்.

இதன்போது அம்பாரை மாவட்டத்திற்கு 01 தேசியப்பட்டியல் ஆசனமும் வழங்கப்படவுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -