அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கனணிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி இரண்டையும் இணைத்து தேசிய ஓய்வூதிய பணிக்கொடை நிதி என்ற ஒன்றை உருவாக்கப்படும்.
லயன் அறைகளில் 10 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் தோட்ட மக்களுக்கு சிறிய இடம் அல்லது வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று பாராளுமன்றத்தில் நடுத்தர பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆற்றிய விஷட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2020இல் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 3.5 வீதமாகக் குறைக்கப்படும் என தனது உரையில் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அல்-மசூரா-
