அபு அலா -
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு வியாழக்கிழமை (29) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரை நேரடியாகச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இச்சந்திப்பு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஷல் தலைமையில் வருகை தந்த இக்குழுவினருடன் முன்னாள் அதிபர் ஜே.சி.ஏ.மஜீட், பிரதி அதிபர் எம்.எம்.இப்றாகிம் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது அமைச்சரின் கடந்தகால சேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஷல் மற்றும் முன்னாள் அதிபர் ஜே.சி.ஏ.மஜீட் ஆகியோர்களினால் எடுத்துரைக்கப்பட்ட இதேவேளை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் குறைபாடுகள் பற்றியும் இக்குழுவினரினால் எடுத்துரைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் தன்னாலான உதவிகளை நான் செய்து தருவேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் பாடசாலை சார்பாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஷல் மற்றும் அபிவிருத்திக் குழு சார்பில் முன்னாள் அதிபர் ஜே.சி.ஏ.மஜீட் ஆகியோரினால் சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீருக்கு பொண்னாடை போர்த்தி கௌரவித்தனர்.