நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இணையதளத்தில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க குறித்து போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இணையதளத்தில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு பிரதான எதிர் கட்சி கொறடாவாவுக்கு வழங்கப்பட்ட வானகத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக எதிர் கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனினால் வழங்கப்படுகின்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தி போலியானதென கூறி மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பிரிவு, பிரதான எதிர் கட்சி கொறடாவாவுக்கு வழங்கப்பட்ட வானகத்தையே அநுர குமார திஸாநாயக்க பெற்றுகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவரையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வாகன பயன்பாடு உட்பட பல சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையே, விமலின் இணையத்தளம் இவ்வாறு போலியான செய்தி வெளியிடுகின்றமைக்கு காரணம் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.