எம்.ஜே.எம். சஜீத்-
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அஷ்ரஃப் நகர்பிரதேசத்தில் வசித்து வந்த குடும்பத்தலைவி பலத்த காயங்களுக்கு இலக்காகி அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்றிரவு (20) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 52 வயதுடைய அஹமது லெவ்வை கதீஜா உம்மா என்னும்இல்லத்தலைவி மயக்கமுற்ற நிலையில் உயிருக்காகப் போராடியவேளையில் மக்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லையால் மக்களின் இருப்பிடங்கள் சேதமாக்கப்பட்டுவருவதுடன், பயிரினங்கள் மரம் செடி கொடிகள் போன்றன நாசமாக்கப்பட்டும் வருகின்றன. இது பற்றிசம்பந்தப்பட்டவர்களிடம் தெரியப்படுத்தினால் நிரந்தரமான ஓர் தீர்வினை அவர்கள் பெற்றுத்தரவில்லை என பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர்
