ஜுனைட்.எம்.பஹ்த்-
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான, ஹிஜ்ரி -1437 இஸ்லாமிய புதுவருட கலை நிகழ்வுகள் 2015.10.19 திங்கட்கிழமை மாலை 03.00 மணி முதல் 05.00 மணிவரை பிஸ்மி தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அ அஷ்ஷெஹ். ARM.அஸ்ஹர் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டதோடு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை முஅல்லிமாக்கள் மற்றும் பிஸ்மி குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய பிஸ்மி கிளைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் உரையாடல், உணர்ச்சிக் காவியம், வினா விடை, அபிநயப் பாடல், கஸீதாக்கள், கவிதைகள், முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் பற்றிய பேச்சுகள் போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் பிஸ்மி முஅல்லிமாக்களின் முஹர்ரம் கலந்துரையாடல், பிஸ்மி பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் என்பன மாணவர்களின் அறிவுக்கு
விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நிகழ்வின் விசேட அம்சமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதோடு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலைக்கு கடந்த வருடம் அதிகூடிய நாட்கள் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





