முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.
தனது அரசியல் எதிர்காலத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் பந்துல குணவர்தன நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் ஓர் கத்தோலிக்கர் எனவும் மனைவி ஓர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன மதக் குரோத உணர்வில் நாடாளுமன்றில் கருத்து வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை தமிழ் பெயர் ஒன்றாக பந்துல குறிப்பிட்டிருந்தார். முன்னதாக தாம் அவ்வாறு கூறவில்லை என மறுப்பு வெளியிட்ட பந்துல பின்னர் பிழையாக பெயரை குறிப்பிட்டதற்காக நாடாளுமன்றில் நேற்று மன்னிப்பு கோரியிருந்தார்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அவையில் ரவி கருணாநாயக்க இருக்கவில்லை.இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட போது பந்துல பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.
