சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபையின் சகல தரப்பினது பங்கு பற்றுதலுடன் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் என்ற மாவட்ட மட்ட கூட்டங்களை விரைவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் கிழக்கு மாகாண அமர்வு தவிசாளர் நிஹால் கலபதி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் சகல தரப்பினரது பங்குபற்றலுடன் சென்ற ஆட்சி காலத்தில் மாவட்டங்கள் தோறும் கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் என்ற பெயரிலான கூட்டங்களை நடாத்தியதால் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளவேண்டிய அவசியமான அபிவிருத்தி திட்டங்களை அடையாளங்காணக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
புதிய முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னர் இதுவரை கூட்டங்கள் நடாத்தப்படாமல் இருப்பதனால் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திதிட்ட விபரங்களை அரிய முடியாதுள்ளதாக கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அண்மைக் காலமாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக சமூகங்களுக்கிடையே சந்தேகங்களும், இன விரிசல்களும் ஏற்படும் நிலைமைகளும் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படும் திட்டத்தில் தமிழ், சிங்கள மக்களின் படசாலைகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வுளுP திட்டத்தில் அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் நிதி வேறு மாவட்ட பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.
நானும், முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீரதிஸாநாயக்க அவர்களும் அமைச்சர்களாக இருந்த போது அம்பாறை மாவட்டத்தில் இலுக்குச்சேனை - இறக்காமம், நியூகுன எலக்கம்புர கிராமங்களில் பால் குளிரூட்டல் நிலையங்கள் அமைப்பதற்கும், வாழ்வாதார உதவி வழங்குவதற்குமாக மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 42 மில்லியன் நிதிவேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான நிலைமைகளை தவிர்த்துக் கொள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் என்ற கூட்டங்களை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஒருவருடத்திற்கு ஒருமுறை நடாத்துமாறும் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துமாறு கிழக்கு மாகாண சபையிடம் கோரி தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்ப்பித்தார்.
