இங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார்.
தான் ஆசையாக வளர்த்துவரும் பஞ்சவர்ணக் கிளிகளைப் போல் மாறுவதற்காக இவர் அண்மையில் தனது இரு காதுகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.
ஏற்கனவே கிளிகளைப் போல் தோற்றமளிப்பதற்காக, தனது கை, கால்களில் 110 டேட்டூக்களைக் குத்திக் கொண்டார். இது மட்டுமின்றி, தனது உடலின் பல்வேறு பாகங்களில் அணிகலன்கள் அணிவதற்காக துளையிட்டுள்ளார்.
மேலும் தனது நாக்கையும் டெட் ரிச்சர்ட்ஸ் இரு துண்டாக வெட்டிக்கொண்டுள்ளார்.
இவை அனைத்தையும் மிஞ்சும்படியாக, மிக விரைவில் கிளி மூக்கு போல தனது மூக்கை மாற்றிக்கொள்ளும் அறுவை சிகிச்சையையும் டெட் ரிச்சர்ட்ஸ் செய்துகொள்ளவுள்ளாராம்.





