ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
மஹாவலி நீரினை திசைதிருப்பி ஆயிரக்கணக்கான தரிசு நிலங்களை விவசாயத்திக்கு பயன்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான உயர்மட்ட சந்திப்பு இன்று 20 நடைபெற்றது.
சவுதி அரேபியா நாட்டின் நிதியினை கொண்டு இலங்கையில் பல்வேறு பாரிய வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எம.எஸ்.தௌபீகின் அயராத முயற்சியினால் இலங்கையின் மிக நீண்ட பாலமான கிண்ணியாப் பாலம் அமைக்கப்பட்டது.
அதேவேளை கடந்த 2014 காலப்பகுதியில் சவுதிஅரேபியா அரசாங்கத்திடம் மஹாவலி நீரினை திசைதிருப்பும் திட்டத்திற்கான முன்மொழிவினை திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் வழங்கியதோடு தற்போது இத்திட்டத்தின் 95 வீதமான வேளைகள் முற்றுப்பெற்றுள்ள வேளையிலேயே இச் சந்திப்பு நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுக்கு ஒளியூட்டும் இத்திட்டம் மக்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை உண்டுபண்ணும் அதேவேளை கந்தளாய்,கிண்ணியா பிரதேச விவசாயிகள் பெரிதும் நண்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா நாட்டின் சவுதி நிதிக்குழுவின் தொழிநுட்ப குழுவின் உயர்பிரதிநிதியும் பொறியியலாளருமான அப்துல்லா செதோக்கி பொறியியலாளர் பெந்தர் இருவரும் கலந்து கொண்டனர்.
கந்தளாய் நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய அலுவலக விருந்தினர் விடுதியில் மாவட்ட நீர்பாசன பணிப்பாளரும்,பிரதம பொறியியலாளருமான கே.எம்.ஜூனைட் தலைமையில் நடைபெற்ற இறுதி திட்ட அறிக்கை வரைவிலக்கச் சந்திப்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் தேசிய மட்ட பொறியியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


