க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – பெற்ரோசோ தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களைத் தேடும் முயற்சியில் பொகவந்தலாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபாத வனப்பகுதியில் நடமாடும் மரை ஒன்று இரை தேடி பெற்ரோசோ தோட்டப் பகுதிகளுக்கு செல்வது வழமை. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட சந்தேக நபர்கள் 07.10.2015 அன்று புதன்கிழமை மரையை வேட்டையாடியுள்ளனர்.
வேட்டையாடப்பட்ட மரையை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்தனர். எனினும் பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் வேட்டையாடிய மரையை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
வேட்டையாடப்பட்ட மரையை வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளதோடு, சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
இதேவேளை வேட்டையாடப்பட்ட மரை சுமார் 30 கிலோகிரேம் எடைகொண்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.